பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
பதான் விழாவிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நடிகை தீபிகா படுகோன் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷாருக்கான் அணிந்திருந்த நீல நிற கடிகாரம் நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வாட்ச் ராயல் ஓக் பெர்பெச்சுவல் காலண்டர் வாட்ச், ₹4.98 கோடி மதிப்புடையது என்றும் இணையதளம் Chrono24 இன் படி, இந்த மாடல் கடிகாரங்கள் ₹4.7 கோடிக்கு விற்கப்படுகிறது எனவும் தகவல் பரவுகிறது. கிட்டத்தட்ட 5 கோடிக்கு ஒரு கைக்கடிகாரமா? என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.