ஷக்கிலாவுக்கு தடை!

மலையாள திரைப்படமான ’நல்ல சமயம்’ என்ற படத்தின் தொடக்கவிழா கோழிக்கோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஷகிலா இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு, வணிக வளாக நிர்வாகம் தடை விதித்துள்ளது. கவர்ச்சி திரைப்படங்களில் அவர் நடித்திருப்பதே, இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஷகீலா, இது எனக்கு புதிதல்ல.. பல்வேறு அவமானங்களை நான் சந்தித்துள்ளேன். ஆனால், ஏன் இன்னும் என்னை ஏற்பதற்கு மறுக்கிறார்கள் என புரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.