Connect with us

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்த நாள் பரிசு! என்ன தெரியுமா?

சினிமா

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்த நாள் பரிசு! என்ன தெரியுமா?

நடிகர் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும், அஜித் படம் தொடர்பான அப்டேட்கள் சிலவும், இன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, பில்லா, தீனா ஆகிய இரண்டு திரைப்படங்கள், திரையரங்குகள் மீண்டும் ரீ ரிலீஸ்-ம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, ரசிகர்கள், முந்தைய தயாரிப்பாளர்கள், தற்போதைய தயாரிப்பாளர் என்று பலரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சர்ப்பரைஸ்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஷாலினி தனது கணவருக்கு, புதுவிதமான பிறந்த நாள் பரிசை, அவருக்கு வழங்கியுள்ளார். அது என்னவென்றால், ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள DUCATI MULTISTRADA V4 என்ற பைக்கை, பரிசாக கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படமும், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top