அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இவர், தமிழில், 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ஷாலினி பாண்டே, அதிர்ச்சி தகவல் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதாவது, “எனக்கு 23 வயது இருக்கும்போது, நான் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த படத்தின் இயக்குநர், நான் உடைமாற்றிக் கொண்டிருக்கும்போது, வேண்டுமென்றே, கேரவன் உள்ளே நுழைந்தார். பின்னர், நான் சத்தம் போட்டு, அவரை அங்கிருந்து வெளியேற்றினேன்” என்று அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
மேலும், “சினிமாவில் எந்த அளவுக்கு நல்லவர்களுடன் பணியாற்றி உள்ளேனோ, அதே அளவுக்கு கெட்டவர்களுடனும் நான் பணியாற்றி உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.