அஜித் மச்சினிச்சியோடு சேர்ந்து நல்லது செய்த கார்த்தி!

நடிகர் கார்த்தி உழவன் என்ற அமைப்பின் மூலம், விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுமட்டுமின்றி, கார்த்தியின் ரசிகர்கள், பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கழிவு மேலாண்மை என்ற சமூகப் பணிக்காக நடிகர் கார்த்தியும், ஷாலினியின் தங்கை ஷாம்லியும் ஒன்றாக இணைந்துள்ளனர். கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தனது அம்மா பரிசாக வழங்கிய பழைய கிட்டாரை, ஷாம்லியிடம் கார்த்தி வழங்கியுள்ளார்.

அதனை நல்லதொரு கலைப்படைப்பாக ஷாம்லி மாற்றியுள்ளார். தற்போது, இந்த பொருள் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படும். இவ்வாறு, பழைய பொருட்களை வழங்கினால், அதனை புதிய பொருளாக மாற்றி, தேவைப்படுவோருக்கு வழங்கலாம் என்று நல்ல விஷயத்தை கார்த்தியும், ஷாம்லியும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.