தர்ஷனின் வீட்டின் முன்பு காரை நிறுத்தியது தொடர்பாக, அவருக்கும், நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு குறித்து, நீதிபதியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நேற்று தர்ஷனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகை ஷனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “விசாரணை கூட நடத்தாமல், ஒரு தரப்பின் மீது மட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும், “நீதிபதியின் மகன் சொல்வது தான் உண்மை என்றால், சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே” என்றும், அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை ஷனம் ஷெட்டியும், நடிகர் தர்ஷனும் காதலித்து வந்த நிலையில், தற்போது பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.