Connect with us

Raj News Tamil

இந்தியன் படத்தில் உள்ள மிகப்பெரிய குழப்பம்.. விளக்கம் தந்த சங்கர்!

சினிமா

இந்தியன் படத்தில் உள்ள மிகப்பெரிய குழப்பம்.. விளக்கம் தந்த சங்கர்!

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில், நடிகர் கமல் சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம், கடந்த 1918-ஆம் ஆண்டு பிறந்ததாக அப்படத்தில் கூறப்பட்டிருக்கும்.

இதனை வைத்து பார்க்கும்போது, தற்போது 2-ஆம் பாகத்தில் வரும் சேனாபதிக்கு, 106 வயது இருக்கும். ஆனால், இப்படத்தில் சேனாபதி கதாபாத்திரம், பறந்து பறந்து சண்டை போடுகிறது.

இது எப்படி சாத்தியம் என்று ஒருசிலருக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனை பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியாக, ஷங்கரிடம் தற்போது கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அவர், சீனாவில் உள்ள தற்காப்பு கலை மாஸ்டர் ஒருவர், 106 வயதிலும், பயிற்சியிலும் ஈடுபடுகிறார். அதேபோல், சேனாபதியும், ஒரு வர்மக்கலை மாஸ்டர். அதனால், அவராலும், அதனை செய்ய முடியும்.

உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாட்டோடு, யோகா, தியானம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராகவும், ஒழுக்கத்துடனும் இருந்தால், வயது ஒரு பொருட்டல்ல என்று ஷங்கர் கூறியிருக்கிறார். இதன்மூலம், மிகப்பெரிய குழப்பத்திற்கு தெளிவு கிடைத்துள்ளது.

More in சினிமா

To Top