தான் இயக்கும் திரைப்படங்களை, தயாரிப்பாளர்களுக்கு சில இயக்குநர்கள் காண்பிக்க மாட்டார்கள். ரிலீஸ் ஆன பிறகு தான், தயாரிப்பாளர்களே படத்தை பார்க்க முடியும் என்ற நிலை இருக்கும். அந்த பட்டியலில், இயக்குநர் ஷங்கரும் ஒருவர் என்று, சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்வது வழக்கம்.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ஷங்கர் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளாராம். அதாவது, தற்போது கேம் சேஞ்சர் என்ற படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
இப்படம், நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியன் 2 திரைப்படம் தோல்வி அடைந்ததால், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளருக்கு, தங்களது படத்தின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இதன்காரணமாக தான், குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும், தயாரிப்பாளருக்கு ஷங்கர் காண்பித்துள்ளாராம். இதனை பார்த்த தயாரிப்பாளருக்கும், தற்போது பெரிய நம்பிக்கை வந்துள்ளதாம்.