சூர்யா-க்கு டாட்டா காட்டிய ஷங்கர்!

நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஆரோக்கியமான மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், லாக்கப், வெக்கை, பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், வேள்பாரி என்ற சரித்திர நாவலும் திரைப்படமாக மாற இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் எடுக்க உள்ள இந்த திரைப்படத்தில், சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறாராம். தமிழ் மண்ணின் நாவலுக்கு, இந்தி நடிகர் பொறுத்தமாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..