அதிதி ஷங்கருக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து, மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளதால், பல்வேறு வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது.

இந்நிலையில், அதிதி ஷங்கருக்கு அவரது தந்தையும், இயக்குநருமான ஷங்கர் புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளராம்.

அதாவது, “இரண்டு வருடங்கள் வரை, நீ எவ்வளவு படங்களில் வேண்டுமானாலும் நடிச்சுக்கோ.. ஆனால், அதன்பிறகு, நீ கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளாராம்.

இதனால், திருமணம் ஆவதற்குள், பல நல்ல படங்களில் நடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில், அதிதி ஷங்கர் ஈடுபட்டு வருகிறாராம். இவர் தற்போது, விஷ்னு வர்தன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News