சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஷங்கர் மருமகனின் அதிரடி முடிவு!

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும், இயக்குநர் ஷங்கரின் மருமகனுமானவர் ரோஷித். இவர், கிரிக்கெட் கோச்சிங் வழங்கும்போது, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ரோஷித் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோஷித், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, ரோஷித் தனது பதிவில் தெரிவித்துள்ளார். என்னை நம்பி நின்ற அனைவருக்கும் நன்றி என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.