மதுரை எம்.பியாக இருப்பவரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன், வேள்பாரி என்ற சரித்திர நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலை திரைப்படமாக எடுக்க விரும்பிய ஷங்கர், அதற்கான உரிமையை பெற்றுள்ளார்.
இவ்வாறு இருக்க, அந்த நாவலில் உள்ள சில காட்சிகளை, ஒருசிலர், தங்களது படங்களில் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படத்தின் டிரைலரில் கூட, நாவலில் உள்ள சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனால் கடுப்பான இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“அனைவரின் கவனத்திற்கும். சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற ‘வீரயுக நாயகன் வேள் பாரி’ நாவலின் பதிப்புரிமையை பெற்றவர் என்பதால், அந்த நாவலின் சில முக்கியமான காட்சிகள், சில படங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு, கலக்கம் அடைந்தேன்.
குறிப்பாக, சமீபத்தில் ரிலீஸ் ஆன ஒரு திரைப்படத்தின் டிரைலரில், நாவலின் முக்கியமான சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதை, கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.
இந்த நாவலில் உள்ள காட்சிகளை, திரைப்படங்களில், வெப் சீரிஸ்களில் மற்றும் எந்தவொரு முறையிலும், பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். படைப்பாளியின் உரிமையை மதியுங்கள்.
அனுமதி இல்லாமல் காட்சியை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள் அல்லது சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.