தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான 90 சதவீத திரைப்படங்கள் பெரிய வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. முன்னணி நடிகர்கள் பலருடன் கூட்டணி சேர்ந்த இவர், ரஜினியுடன் மட்டுமே 3 முறை இணைந்துள்ளார்.
இந்நிலையில், இவர் ரஜினியுடன், 4-வது முறை இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில், தற்போது நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனராஜ் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது ரஜினியின் 171-வது படமாக இருக்கும் என்றும், இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, ரஜினியின் கடைசி படத்தை இயக்குவதற்கு, ஷங்கர் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறாராம்.
இதனால், 172-வது படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புகள் உள்ளதாம். இது எந்திரன் படத்தின் 3-வது பாகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஷங்கருக்காக, தனது முடிவை, இவ்வாறு ரஜினி மாற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.