தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் தான் சண்முகப் பாண்டியன்.
இவர், சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு, பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல், அவர் தவித்து வந்தார்.
இவ்வாறு இருக்க, நடிகர் சண்முகப் பாண்டியன், பிரபல இயக்குநர் இயக்கும் வெப் தொடர் ஒன்றில், ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
அதாவது, சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய சசிகுமார், அடுத்ததாக, குற்றப்பரம்பரை என்ற நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளார்.
இந்த வெப் தொடரில் தான், சண்முகப்பாண்டியன் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இவர் மட்டுமின்றி, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது.