சித்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தின் மூலம், தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் சாந்தனு. இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகனான இவர், தனக்கென்று தனி அடையாளத்தை பிடிப்பதற்கு, நீண்ட காலமாக போராடி வருகிறார்.
தற்போது, இவரது நடிப்பில், இராவணக் கோட்டம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷீட்டிங்கின்போது நடைபெற்ற அதிர்ச்சிகர நிகழ்வு ஒன்றை, பேட்டி ஒன்றில், சாந்தனு தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய விவரம் பின்வருமாறு:-
“ராமநாதபுரத்தில் உள்ள சிறிய கிராமத்தில், ராவணக் கோட்டம் படத்தின் ஷீட்டிங் நடந்தது. அப்போது, அங்கிருந்த பள்ளி ஒன்றிற்கு, சென்றிருந்தேன். பாக்யராஜின் மகன் என்று சொன்னதும், என்னை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து, அமர வைத்தார். மேலும், அவரது உதவியாளரிடம், எனக்கு காபி எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து, உங்க அப்பா என்ன ஆளுங்க ( சாதி ) என்று வெளிப்படையாகவே கேட்டார்.
பின்னர், அதிர்ச்சி அடைந்து, அப்பாவின் சாதி என்னவென்று கூறினேன். அதன்பிறகே, எனக்கு அந்த காபி கொடுக்கப்பட்டது” என்று அதிர்ச்சிகர தகவலை கூறினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.