“இதுதான் நடக்கும்-னு ஏற்கனவே தெரியும்..“ – காங்கிரஸ் கட்சியை வெளுக்கும் கூட்டணி தலைவர்கள்!

மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில், சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மட்டும் இன்று வெளியானது.

இதில், மிசோரம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், நாளை வெளியாக உள்ளது. முடிவுகள் வெளியாகியுள்ள 4 மாநிலங்களில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மற்ற மாநிலங்களான, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில், பாஜக வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, “இது எதிர்பார்த்த தோல்வி தான். வரும் கூட்டத்தில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து, விவாதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், ஜனதா தால் கட்சியின் பொதுச் செயலாளரும், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிகில் மாண்டல், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நித்திஷ் குமார் தலைமையில் தான் இனி இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், தற்போது அந்த தேர்தல் முடிவுகள் நம் முன் இருக்கிறது. இதனை வைத்து பார்க்கும்போது, இந்தியா கூட்டணியை நிதிஷ் குமார் தான் வழிநடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியின் ப்ளாக் மீட்டிங், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அன்று, டெல்லியில் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 25 எதிர்கட்சிகள் கலந்துக் கொள்ள உள்ளது. இந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வியூகம் அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News