காங்கிரஸ் கட்சியில் ஜி 23 தலைவர்கள் குழு என்பதே இல்லை – சசி தரூர்

காங்கிரஸ் கட்சியில் ஜி 23 தலைவர்கள் குழு என்பதே இல்லை என்று கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில் கட்சித் தலைவர் உட்பட நிர்வாக அமைப்பில் சீர்திருத்தம் தேவை என பல்வேறு மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். அந்த வகையில் அந்த தலைவர்கள் ஜி 23 தலைவர்கள் என அழைக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் ஜி 23 தலைவர்கள் குழு என்பதே இல்லை என்று தெரிவித்தார். அப்படி ஒரு குழு இருப்பதாக உருவகப்படுத்தப்பட்டதே தவிர உண்மையில் அப்படிடி ஏதும் இல்லை என்றார்.