சென்னை அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் அருகே டார்க் ஸ்மோக் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குளிர்பானங்கள், ஷவர்மா போன்ற உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த கடையில், சுகாதாரமே இல்லாமல், உணவுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்வதாக, இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், கையில் அடிப்பட்டு கிடக்கும் ஊழியர் ஒருவர், கையுறை எதுவும் அணியாமல், வெறும் கையாலேயே ஷவர்மா தயார் செய்துக் கொடுத்துள்ளார்.
மேலும், அந்த உணவகத்தின் உள்ளே, கரப்பான் பூச்சி சுற்றித் திரிவது போலவும், அந்த வீடியோவில் உள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.