Connect with us

Raj News Tamil

ராகுல்காந்தியை திருமணம் செய்ய ரெடி.. ஆனால்.. – கண்டிஷன் போட்ட பிரபல நடிகை..

சினிமா

ராகுல்காந்தியை திருமணம் செய்ய ரெடி.. ஆனால்.. – கண்டிஷன் போட்ட பிரபல நடிகை..

பிரகதீஷ் இயக்கத்தில், ஜீவன் நடிப்பில், கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யுனிவர்சிட்டி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா.

இந்த படத்திற்கு பிறகு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும், இந்தி சினிமாவில் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து வரும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் பொது இடத்திற்கு வந்திருந்தபோது, ராகுல் காந்தியை திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கூலாக பதில் அளித்த ஷெர்லின் சோப்ரா, நிச்சயம் செய்துக் கொள்வேன்.. ஆனால், என் குடும்ப பெயரை மட்டும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்தார்.

More in சினிமா

To Top