பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக் கொண்டு, இறுதிப் போட்டி வரை சென்றவர் திருநங்கை ஷிவின். இவரும், நடிகை ரக்ஷிதாவும், பிக்-பாஸ் வீட்டின் உள்ளே இருந்தவரை, மிகவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகும், இவர்களது நட்பு, தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை ஷிவினின் ஆசையை, ரக்ஷிதா நிறைவேற்றியுள்ளார்.
அதாவது, இருவரும் இணைந்து, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களையும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.