சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
அதன்படி மார்ச் 1ஆம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது.
19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.23.50 காசுகள் உயர்ந்து, ரூ.1,960.50க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.