அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பு!

புற்றுநோய்க்கு ஆலோசனை பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்டோர்கள், அவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள் என அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘தங்களை தொடர்புகொண்டு புற்றுநோய்க்கு ஆலோசனை பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்டோர் ஆவர். அவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள்.

26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் பாதிப்பும் 16 சதவீதம் பேருக்கு இரைப்பை புற்றுநோயும் 15 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயும் 9 சதவீதம் பேருக்கு ரத்த புற்றுநோயும் இருப்பது தெரியவந்தது. ஹைதராபாத், மீரட், மும்பை மற்றும் புது தில்லியில் இருந்து அதிகமானோர் தொலைபேசி மூலம் அழைத்தனர்.

புற்றுநோய் சிகிச்சை குறித்து இலவச ஆலோசனை பெற (93555 20202) என்ற கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News