மோசமான நிலையில் உக்ரைன் ராணுவ வீரர் – ரஷ்யா செய்த கொடூரம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைய முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா போர் தொடுத்தது. இந்த நிமிடம் வரை நீடிக்கும் இப்போரில், உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவின் பிடிக்கு சென்றது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, போன்ற ஐரோப்பிய நாடுகள் பல்லாயிரக்கணக்கான அணு ஆயுதங்களை கொடுத்து, இழந்த பகுதிகளை மீட்க உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடம் போர்க் கைதியாக இருந்த உக்ரைன் வீரர் ஒருவர், சிறையில் இருந்து தப்பி, உக்ரைனுக்கு வந்துள்ளார்.

அவரது முந்தைய புகைப்படத்துடன் கூடிய, தற்போதுள்ள புகைப்படத்தை, உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், முன்பு கம்பீரமாக இருந்த அந்த ராணுவ வீரர், ரஷ்யாவின் பிடியில் சிக்கிய பிறகு, மோசமான நிலைக்கு மாறியுள்ளார்.

இதன்காரணமாக, ரஷ்யாவை கடுமையாக விமர்சித்துள்ள உக்ரைன் அரசு, போர் கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தொடர்பான விதியை ரஷ்யா மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புகைப்படம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.