பதற்றத்தில் அமெரிக்கா…! திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல்…! அச்சத்தில் மக்கள்…!

அமெரிக்காவின் டிசி நகரில், சாலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இதனை, தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் விட்டோ மேகியோலோ தெரிவித்து உள்ளார்.சம்பவத்தில் எராளமானோர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் தலைநகரமாக வாஷிங்டன் டிசி நகரம் உள்ளது. இந்த நகரம் போடாமெக் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் அமெரிக்க நாட்டு மத்திய அரசின் தலைமையகமான வெள்ளை மாளிகை உள்ளது.

நமது ஊர் டெல்லி போல் அமெரிக்காவின் மைய அரசின் நிர்வாகம் வாஷிங்டன் டிசியில் இயங்குகிறது.இந்நிலையில் சற்று முன்பாக வாஷிங்டன் டிசி நகரில் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியாக தகவல்களை வெளியிடவில்லை.

இது தொடர்பாக பாக்ஸ் -5 சேனல் வெளியிட்டுள்ள தகவலின் படி 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து போலிசார் அங்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும்.

அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22-ம்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
அமெரிக்காவில் நேற்றும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது.

இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.