தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன், டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவருக்கொருவர் ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்து கொண்டனர்.
இந்நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த அதிபர் பைடன் , டிரம்ப் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த துயரமான நேரத்தில் டிரம்புக்கு எதிராக யாரும் பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் , அவருக்கு எதிரான நடவடிக்கை அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறும் ஆதரவாளரகளை கேட்டு கொண்டுள்ளளார்.