புதுடெல்லி உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி தலைநகரில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் புதுடெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் பின்னர் சிறிது நேரத்தில் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் புதுடெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.