நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர். மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில நாட்களாக, தகவல் ஒன்று பரவி வருகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜெயிலர் 2-விலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.