ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். இந்த படத்திற்கு பிறகு, 3, வேதாளம், புலி, சிங்கம் 3 என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “நான் கமலின் வாரிசு என்பதால், பொதுவெளியில் சுதந்திரமாக இருக்க முடியாது. அதனால், போலியான பெயரை உருவாக்கி, அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் பயணித்தேன்” என்று கூறியுள்ளார்.