தி கோட் படத்தில் ஸ்ருதி ஹாசன்! இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் இருக்கோ?

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் நடிப்பது, ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது.

அதன்பிறகு, மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த், இப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் திரையில் தோன்ற உள்ளார் என்று கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு அடுத்த கட்ட சர்ப்பரைஸ் ஆக இருந்தது.

இதுமட்டுமின்றி, வேறு சில நடிகர்களும், பிரபலங்களும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இவ்வாறு பல்வேறு சர்ப்பரைஸ்களை கொடுத்த இப்படக்குழு, தற்போது இன்னொரு சர்ப்பரைஸ்-ஐ ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

அது என்னவென்றால், நடிகை ஸ்ருதி ஹாசனும் இப்படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறாராம். அதாவது, தி கோட்டின் 3-வது பாடல், வரும் ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

இந்த பாடலை, நடிகை ஸ்ருதி ஹாசன் தான் பாடி இருக்கிறாராம். இது, ரசிகர்களுக்கு அடுத்த கட்ட சர்ப்ரைஸ் ஆக அமைந்திருக்கிறது.

RELATED ARTICLES

Recent News