தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று தெலுங்கு சினிமாவில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. ஏனென்றால், என்னுடைய முதல் 2 திரைப்படங்களும், தோல்வி அடைந்துவிட்டன.
ஆனால், அந்த இரண்டு படங்களிலும், நான் ஒரே நடிகருடன் தான் நடித்தேன் என்பதை, அவர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
“ஆனால், இயக்குநர் ஹரிஷ் ஷங்கரும், நடிகர் பவன் கல்யாணும், என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
கப்பர் சிங் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று, அவர்கள் எனக்காக போராடினார்கள். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, என்னுடைய முழு சினிமா வாழ்க்கையும் மாறிவிட்டது” என்றும், அவர் கூறியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் இரண்டு தெலுங்கு படங்களிலும், நடிகர் சித்தார்த் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.