கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பு மாற்றப்படும் என்றும், முதலமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் தகவல் கசிந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலான பல்வேறு கருத்துக்களை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து, மீடியாக்களில் கூறி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அக்கட்சியின் சார்பில், கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில், முதலமைச்சர் பதவி மற்றும் தலைமை பொறுப்பு மாற்றப்படுவது குறித்து, யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும், இது நமது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றும், வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் செயல்பாடுகள், அரசு விவாகரங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.