அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம், கடந்த 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம், 5 நாட்கள் முடிவில் மட்டுமே 900 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு, பாட்னாவில் கூடிய கூட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், படத்திற்காக செய்யப்பட்ட மார்கெட்டிங் யுக்தி தான் அது என்றும், இந்தியாவில் கூட்டம் கூட்டுவது என்பது பெரிய விஷயம் அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கட்சிகளின் நிகழ்வுக்கும் தான் கூட்டம் கூடுகிறது. அதனால், அவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்களா?. எனவே, கூட்டம் கூடுவது என்பது இயல்பான விஷயம் தான் என்றும், சித்தார்த் கூறினார்.