Connect with us

Raj News Tamil

ஏலியனுக்கு குரல் கொடுக்கும் பிரபல நடிகர்! அயலான் அப்டேட்!

சினிமா

ஏலியனுக்கு குரல் கொடுக்கும் பிரபல நடிகர்! அயலான் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஏலியனுக்கு, முன்னணி நடிகர் ஒருவர் குரல் கொடுக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன், முக்கிய கதாபாத்திரம் என்பதால், அதற்கு முன்னணி நடிகர் குரல் கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்காக, பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top