ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்கந்தர்.
சஜித் நதியத்வாலா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி உள்ளிட்டோரும், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
அதன்படி, வரும் மார்ச் 30-ஆம் தேதி அன்று, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த தகவலை அறிந்த சல்மான் கான் ரசிகர்களும், ஏ.ஆர்.முருகதாஸின் ரசிகர்களும், உற்சாகம் அடைந்துள்ளனர்.