சிக்கிம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றது.
அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கிருஷ்ண குமாரி ராய், பதவியேற்ற அடுத்த நாளே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சட்டப்பேரவைத் தலைவர் எம்.என்.ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சிக்கிம் சட்டப் பேரவை செயலாளர் லலித் குமார் குருங் தெரிவித்துள்ளார்.