Connect with us

Raj News Tamil

பிரம்மாண்ட அரண்மனை.. கம்பீர நடை.. வைரலாகும் சிம்புவின் வீடியோ..

சினிமா

பிரம்மாண்ட அரண்மனை.. கம்பீர நடை.. வைரலாகும் சிம்புவின் வீடியோ..

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, நடிகர் கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு, இப்படம் தொடர்பான வீடியோ ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பேரரசனின் படைகள் ஒன்று திரண்டு நிற்கிறது.

அப்போது, பிரம்மாண்ட அரண்மனையில் இருந்து, கம்பீர நடையுடன் நடிகர் சிம்பு வெளியே வருகிறார். அதோடு முடிவடையும் அந்த வீடியோவில், நடிகர் சிம்பு கோட் சூட்டை அணிந்துக் கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அரசர் காலத்தில் கோட் சூட் எப்படி வந்தது என்று கலாய்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top