அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில், முக்கியமான காட்சி ஒன்றில், சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். இது, உண்மையாகும் பட்சத்தில், இந்த காட்சி திரையில் தோன்றும்போது, அரங்கமே அதிரும் என்பது உறுதி.