சிம்புவின் அடுத்த படம் யாருடன்? இவர் கிடையாது?

சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் ஒருசில நடிகர்களில் ஒருவர் சிம்பு. தனிப்பட்ட சில காரணங்களால், சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்த இவர், மாநாடு படத்தின் மூலம், கம்பேக் கொடுத்திருந்தார். இதையடுத்து, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்களில் நடித்து, வெற்றி பெற்றார்.

தற்போது, தனது அடுத்த படத்தை தேர்வு செய்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையே, சிம்புவின் அடுத்த படத்தை, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக, தகவல் ஒன்று பரவி வந்தது. இது, ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, அஸ்வத் மாரிமுத்துவின் படத்தில் நடிப்பதற்கு முன்னால், வேறொரு இயக்குநரின் படத்தில் நடிப்பதற்கு, சிம்பு முடிவு செய்திருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது சென்றுக் கொண்டிருக்கிறதாம். ஆனால், இயக்குநர் யார் என்பது இன்னும் இறுதியாகவில்லை. இந்த படத்தை முடித்த பிறகுதான், அஸ்வத் மாரிமுத்துவின் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News