Connect with us

Raj News Tamil

முடிவுக்கு வந்தது சிம்புவின் நீண்ட நாள் பிரச்சனை!

சினிமா

முடிவுக்கு வந்தது சிம்புவின் நீண்ட நாள் பிரச்சனை!

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு, சிம்புவும், ஐசரி கணேஷ்-ம் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருந்தனர்.

ஆனால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு, கால்ஷீட் தராமல், சிம்பு அலைக்கழித்து வந்தார். இதனால், அவருக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அவர், தனக்கும் சிம்புவுக்கும் இருந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டோம் என்றும், எனவே அவர் மீது விதிக்கப்பட்ட ரெட் கார்டை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீண்ட நாள் பிரச்சனை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

More in சினிமா

To Top