ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் சிம்பு!

நிறைய திறமை இருந்தும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் தவித்து வந்தவர் சிம்பு. தற்போது, பழைய ஃபார்முக்கு வந்துள்ள இவர், மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிம்புவின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தை, சிம்பு எடுக்க உள்ளாராம்.

மேலும், இப்படத்தை சிம்பு தான் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.