மீண்டும் நல்ல வாய்ப்பை தவறவிட்ட சிம்பு!

சினிமாவில் பெரும் சறுக்கல்களை சந்தித்து வந்த சிம்பு, மாநாடு படத்தின் மூலம், மாஸ் கம்பேக் கொடுத்திருந்தார். இதற்கு பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றதால், சிம்புவின் மார்கெட் வேற லெவலில் உயர்ந்தது.

இதையடுத்து, இயக்குநர் சுதா கொங்காரா படத்தில், சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு அதிகமாக சம்பளம் கேட்டதே, இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.