தனுஷ் உடன் மல்லுக்கட்டும் சிம்பு! அதிரடி முடிவு!

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று அனைத்து காலகட்டங்களிலும், நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாக தான் இருந்தனர். தற்போது, இந்த தலைமுறை போட்டியாக தனுஷ்-சிம்பு உள்ளனர். இவர்கள் இருவரின் திரைப்படங்கள் வெளியானாலே, சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக, சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று படிப்படியாக தனுஷ் வளர்ந்துவிட்டார்.

அவரைப் போன்றே, தானும் வளர வேண்டும் என்று, பாலிவுட்டில் சிம்பு கால் பதிக்க உள்ளாராம். இதன் முதற்படியாக, பாலிவுட்டில் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இனி வரும் காலங்களில், அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.