மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிம்பு!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு, பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு, கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, எந்த படங்களிலும் நடிக்காமல், தற்காப்பு கலை கற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள படத்திற்காக தான், இந்த முடிவு என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.