இலங்கை பெண்ணை திருமணம் செய்யும் சிம்பு? இவர் தான் மணப்பெண்ணா? திருமணம் எப்போது?

தமிழ் சினிமாவில், பல்வேறு கிசுகிசுப்புகளுக்கு சொந்தக்காரர் என்றால், அது சிம்பு தான். ஸ்ரேயா, நயன்தாரா, ஹன்சிகா என்று பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு, கடைசியாக நிதி அகர்வால் என்ற நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டிருந்தார். அவரை தான் திருமணம் செய்ய உள்ளார் என்றும், தகவல் வேகமாக பரவி வந்தது.

அதன்பிறகு, சிம்புவுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க, டி.ஆர் முடிவு செய்ததாகவும், தகவல் பரவி வந்தது. இவ்வாறு இருக்க, சிம்புவின் திருமணம் குறித்து, புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளை தான் சிம்பு திருமணம் செய்யப் போகிறாராம். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவலும், எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில், இதுதொடர்பான விளக்கத்தை, சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News