Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

இணையத்தை கலக்கப் போகும் ”சிம்புவின் பிறந்த நாள்..! ஏன் தெரியுமா..?

சினிமா

இணையத்தை கலக்கப் போகும் ”சிம்புவின் பிறந்த நாள்..! ஏன் தெரியுமா..?

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் சிம்புவின் பிறந்த நாளான நாளை, முழுப்பாடல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுவருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top