Connect with us

Raj News Tamil

இந்திய அளவில் சாதனை படைத்த சிம்புவின் VTV திரைப்படம்!

சினிமா

இந்திய அளவில் சாதனை படைத்த சிம்புவின் VTV திரைப்படம்!

பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களை, ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறு ரீ ரிலீஸ் செய்யும் திரைப்படங்கள், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு இருக்க, சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம், இந்திய அளவில் பிரம்மாண்ட சாதனையை செய்துள்ளது.

அதாவது, சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றில், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம், தினசரி ஒருகாட்சிகள் என்ற வீதம், 750 தினங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கானின் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே என்ற திரைப்படம் தான், மறுவெளியீட்டில் நீண்ட நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது.

இதற்கு அடுத்தப்படியாக, இந்திய அளவில் விண்ணைத் தாண்டி வருவாயா சாதித்துள்ளது.

More in சினிமா

To Top