ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பல்வேறு நடிகர்களின் படங்களில், கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன்.
பின்னர், திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது ஒருசில திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகை சிம்ரன் தகதகவென ஆடவா என்ற பாடலுக்கு நடனம் ஆடி, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ, ஒரு பக்கம் லைக்ஸ்களை குவித்தாலும், மற்றொரு பக்கம் இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.