கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. அதன் பிறகு படிப்பாயாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.