பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசீலாவுவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதோடு தெய்வத்தின் தெய்வம் படத்தில், பாடகி சுசிலா பாடிய ‘நீ இல்லாத உலகத்திலே’ பாடலை முதல்வர் ஸ்டாலின் பாடி அவரை கெளரவித்தார்.

மேலும் இசைக்கலைஞர் பி.எம்.சுந்தரத்திற்கும் மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார்.

RELATED ARTICLES

Recent News