தமிழில் கலக்க வரும் நஞ்சம்மா பாட்டி

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில், பிரித்திவிராஜ், பிஜீ மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் 4-தேசிய விருதுகளையும் பெற்று அசத்தியிருந்தது.

இதில் இடம்பெற்ற ”களகாத்த சந்தன மேரம் வெகுவாக பூத்திருக்கு” என்ற பாடலை பாடிய நஞ்சம்மா, இந்த பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

இதைதொடர்ந்து ஸ்டேசன் – 5, செக்கன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடிய இவர், தற்போது மலையாள இயக்குனர் சமர் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் சீன் நம்பர் 62 என்ற படத்தில் என் சேவல் என்ற பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், பாடலை கொண்டாட அவரின் ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.